ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொங்கி எழுந்த லண்டன் தமிழர்கள்

  ஐஸ்வர்யா   | Last Modified : 25 Mar, 2018 12:49 pm

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டனில் அங்கு வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியாகும் விஷப் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு மக்களுக்குச் சிறிய பாதிப்பு முதல் புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதால் ஆலையை மூடக்கோரி அம்மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் குழந்தைகளோடு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த ஆலையின் உரிமையாளருக்கு சொந்தமான வீடு லண்டனில் உள்ளது.

இந்நிலையில் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் ஏராளமானோர் திரண்டு அவரது வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கருத்துகளை அடங்கிய பதாகைகளை உயர்த்தியபடி, பொதுமக்களுக்குப் பேராபத்தை விளைவிக்கும் ஆலையை மூடச் சொல்லி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close