கதவுக்கு முட்டுக்கொடுத்து வந்த விண்கல்!- 30 ஆண்டுகளுக்கு பின் ஆய்வுக்கு வந்தது

  Padmapriya   | Last Modified : 07 Oct, 2018 12:17 pm
100000-meteorite-used-as-doorstop-on-michigan-farm-for-decades

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் கதவு அசையாமல் இருப்பதற்காக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக முட்டுக்கொடுக்க பயன்படுத்தப்பட்ட விண்கல் சமீபத்தில் ஆய்வுக்காக கொண்டுவரப்பட்டது. சுவாரஸ்யமாக இதன் தற்போதைய மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மத்தியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானவியல் பேராசிரியர் மோனா சிர்பெஸ்க்கு என்பவரிடம், சமீபத்தில் ஒரு முதியவர் ஒரு கல்லை எடுத்து வந்து அதனை ஆராய்ச்சி செய்யுமாறு கேட்டுள்ளார். அந்தக் கல் தன்னிடம் 30 ஆண்டுகளாக இருப்பதாகவும் அவர் கூறினார். அதனை இது நாள் வரை தனது வீட்டின் கதவுக்கு முட்டுக்கொடுக்க பயன்படுத்தி வந்ததாகவும் கூறினார்.  

ஆராய்ச்சிக்கு பின்னர் இது தொடர்பாக கூறிய  பேராசிரியர் மோனா சிர்பெஸ்க்கு, ''முதலில் அதனை விண்கல் என யூகிக்க முடியவில்லை. சுமார் 10 கிலோ எடை உள்ள அந்தக் கல்தான் என் வாழ்விலேயே ஆராய்ச்சிக்கு உட்படுத்திய மிகப்பெரிய விண்கல். 

1930களில் மிச்சிகனில் உள்ள எட்மோர் எனும் இடத்தில் இருக்கும் விளைநிலத்தில் வந்து விழுந்த அந்தக் கல்லின் இன்றைய மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்.  பெரும்பாலான விண் கற்களில் 90% முதல் 95% இரும்பு இருக்கும். ஆனால் இந்த விண்கல்லில் 88% இரும்பும் 12% நிக்கலும் இருப்பது இதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதனால் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

தொடக்க கால சூரிய மண்டலத்தின் ஓர் அங்கம் நம் கைகளில் கிடைத்துள்ளது என்று தான் கூற வேண்டும்" என்று பல்கலைக்கழகம் வெளியிட்ட காணொளி ஒன்றில் மோனா கூறியுள்ளார்.

தற்போது இந்த விண்கல் வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் இன்ஸ்டிட்டியூட் எனும் புகழ்பெற்ற அறிவியல் மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விண்கல்லை உறுதி செய்துள்ள அந்த மைய நிர்வாகிகள் அதை விலை கொடுத்து வாங்கவும் முன்வந்துள்ளனர். 

இந்த அறிவிப்புகளால் மகிழ்ச்சி அடைந்துள்ள அந்த முதியவர், கல்லின் விற்பனைத் தொகையில் 10%-ஐ மிச்சிகன் மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close