சொந்த மகளுக்கு ஐ.நா தூதர் பதவியா? உஷாரான ட்ரம்ப்!

  Padmapriya   | Last Modified : 10 Oct, 2018 06:46 pm
dina-powell-under-consideration-to-replace-haley

ஐ.நா-வுக்கான புதிய அமெரிக்கத் தூதர் பதவிக்கு டினா பாவெல் பெயரை பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபையின் அமெரிக்க தூதராக பணியாற்றி வந்தவர் நிக்கி ஹேலி (வயது 46).  இந்திய வம்சாவளி அமெரிக்கரான இவர், அதிபர் டொனால்டு ட்ரம்பின் அரசில் மூத்த முக்கிய அதிகாரியாகவும் பதவி வகித்து வந்துள்ளார்.  இந்த நிலையில், ஹாலே தனது பதவி விலகலை அறிவித்து உள்ளார்.  ஆனால் அதற்கான காரணம் பற்றி அவர் வெளியிடவில்லை. இதனிடையே ட்ரம்ப்புக்கு தேர்தல் நேரத்தில் உதவிட அவர் முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் கூறின. 

கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக நிக்கி ஹேலி நியமிக்கப்பட்டார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தின் 166வது ஆளுநராகவும் நிக்கி வகித்து வந்தார். 

டிசம்பர் மாத இறுதியோடு நிக்கி ஹேலி பதவிக் காலம் முடியும் நிலையில், அந்தப் பதவிக்கு அதிபர் ட்ரம்ப் யாரைத் தேர்ந்தெடுப்பார் என ஊடகங்கள் யூகம் செய்து வந்தன.  இந்தப் பதவியில் ட்ரம்ப் தனது மகள் இவங்காவை நியமிக்கக் கூடும் என்று பேசப்பட்ட நிலையில் அதற்கு முடிவு கட்டும் வகையில், அமெரிக்க தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகராக உள்ள டினா பாவெல்லை ஐ.நா-வுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்க  பரிசீலிப்பதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.  

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close