நான் அரசியலுக்கு வந்தால் 3ம் உலகப் போர் வரும்: பெப்சியின் இந்திரா நூயி

  Newstm Desk   | Last Modified : 10 Oct, 2018 06:34 pm
will-create-world-war-iii-indra-nooyi

பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி, தான் அரசியலுக்கு வந்தால், 3ம் உலகப் போரே வரும் என தெரிவித்துள்ளார். 

'ஆசியா சொசைட்டி' என்ற அமைப்பின் மூலம் உலக நாடுகள் மத்தியில் ஆசிய கண்டத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இந்திரா நூயிக்கு, 'கேம் சேஞ்சர் ஆஃப் தி இயர்' விருது நியூயார்க் நகரில் வழங்கப்பட்டது. 62 வயதான இந்திரா நூயி, பெப்சிகோ நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக 2006ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இந்த மாதம் 2ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். நிர்வாக சிக்கல்கள் வராமல் இருக்க, அடுத்த ஆண்டு வரை பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இந்திரா நூயி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விருது வழங்கும் விழாவில் நூயியிடம் அரசியல் குறித்து கேட்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அரசில் பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா என கேட்கப்பட்டதற்கு, "எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். மிகவும் வெளிப்படையாக பேசுபவள் நான். ராஜ தந்திரம் என்றால் என்னவென்று கூட எனக்கு தெரியாது. நான் பதவியில் இருந்தால் 3ம் உலகப் போர் வந்துவிடும்" என்றார். 

சென்னையில் பிறந்து, வளர்ந்த நூயி, அமெரிக்காவில் குடிபெயர்ந்து, 1994ம் ஆண்டு, பெப்சி நிறுவனத்தில் சேர்ந்தார். அதன்பின், படிப்படியாக முன்னேறி, அந்நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஃபார்ச்சூன் நிறுவனம் வெளியிடும் உலகின் மிக செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலில், தொடர்ந்து பல வருடங்களாக நூயி இடம்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close