அமெரிக்க மாகாணத்தை சின்னாபின்னமாக்கிய மைக்கேல் புயல்!

  Padmapriya   | Last Modified : 11 Oct, 2018 02:00 pm

1-dead-as-powerful-hurricane-michael-smashes-florida-panhandle

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மைக்கேல் புயல் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புளோரிடாவில் புதன்கிழமை 125 கி.மீ. வேகத்தில் மைக்கேல் புயல் அம்மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளை தாக்கியது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 

புளோரிடாவில் இதுவரை வீசிய சூறாவளிகளில் மிக சக்தி வாய்ந்ததாக மைக்கேல் சூறாவளியை அந்நாட்டு ஊடகங்கள் வர்ணிக்கின்றன. மாகாணத்தில் உள்ள நகரங்கள் முற்றிலுமாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பெரும் சேதத்தை உருவாக்கியுள்ள மைக்கேல் சூறாவளி புயலால் ஏறக்குறைய 3 லட்சம் வீடுகள், வணிக நிறுவனங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களிலும் ஏரளாமான மரங்கள் சாலைகளில் தொடர்ச்சியாக விழுந்து இருப்பதால் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது. மின்சார இணைப்புகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. ஒருவர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கையாக புளோரிடாவில் வசித்துவந்த 3,70,000 பேருக்கும் அதிகமான மக்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும், உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் உத்தரவிடப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பை மக்கள் பெரிதுபடுத்தாமல் இருந்ததால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

புளோரிடாவை தாக்கிய மைக்கேல் சூறாவளி புயல் தற்போது அலபாமா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களையும் பதம் பார்த்து வருகிறது. இதனால் அங்கு கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வாரம் முழுவதற்கும் மூடப்பட்டுள்ளன. 

வீடியோ உதவி: வாய்ஸ் ஆப் அமெரிக்கா 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.