உலகிலேயே அதிகம் கேலி செய்யப்படுவது நான் தான்: ட்ரம்ப் மனைவி!

  Newstm Desk   | Last Modified : 12 Oct, 2018 05:15 pm
i-m-the-most-bullied-person-in-the-world-melania-trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலானியா ட்ரம்ப், உலகிலேயே அதிகம் கேலிக்கு ஆளாக்கப்படுவது தான் என தெரிவித்துள்ளார். 

ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலானியா, சமூக வலைதளங்களில் தன அதிகமாக கிண்டலடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 48 வயதான மெலானியா, வெள்ளை மாளிகைக்கு குடியேறிய பிறகு, 'சைபர் புல்லியிங்' எனப்படும் சமூக வலைத்தளங்களில் பெண்களை அவமானப்படுத்துபம் செயல்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்தார். ஆனால், மறுபுறம் தனது ட்விட்டர் கணக்கில் இருந்து பிரபல பெண் நிருபர்கள், காமெடியன்கள் என தனக்கு பிடிக்காதவர்களை ட்ரம்ப் அவமானப்படுத்தி வந்தார். இதை வைத்து "வீட்டிலேயே குற்றவாளியை வைத்துக்கொண்டு நாட்டிற்கு உபதேசமா" என நெட்டிசன்கள் மெலானியாவை கிண்டலடித்தனர்.

அதேபோல, அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடிபெயர முயன்று கைது செய்யப்பட்ட சிறுவர் சிறுமியர்களை முகாம்களில் சந்திக்க சென்றபோது, "எனக்கு கவலை இல்லை. உங்களுக்கு?" (I really don't care, Do you?) என்ற டிஷர்ட்டை அணிந்திருந்தார் மெலானியா. இதுவும் சர்ச்சையை கிளப்பியது. 

கடந்த வாரம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்றிருந்த போது, பழங்கால வெள்ளையர் அதிகாரிகள் போல வெள்ளை நிற ஹெல்மெட் அணிந்து இருந்ததாக நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்தனர். எகிப்தில் அவர் அணிந்திருந்த உடை, இண்டியானா ஜோன்ஸ் படங்களில் வரும் வில்லன் போலவும், மைக்கேல் ஜாக்சனின் உடை போலவும் இருப்பதாக அவரை வறுத்தெடுத்தனர். 

இதுகுறித்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியபோது, "உலகிலேயே அதிகம் கேலிக்கு ஆளாக்கப்படுவது நான் தான்" என கூறினார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close