துருக்கி சிறையிலிருந்து அமெரிக்க பாதிரியார் விடுதலை 

  Padmapriya   | Last Modified : 14 Oct, 2018 11:28 am
turkey-frees-pastor-andrew-brunson-easing-tensions-with-u-s

துருக்கியில் குர்து போராளி குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியார் விடுதலை செய்யப்பட்டார். 

அமெரிக்காவைச்  சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன். இவர் துருக்கியில் தேவாலயம் ஒன்றை நடத்தி வந்தார். ஆனால் அவர் அங்கு உள்ள குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்பு வைத்து உளவு வேலைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி துருக்கி அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. 

இதனால் கோபமடைந்த ட்ரம்ப் நிர்வாகம், ஆண்ட்ரூவை விடுதலை செய்து அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்புமாறு கூறியது. ஆனால் இதற்கு துருக்கி அடிப் பணிய மறுத்தது. இதனால் அமெரிக்கா - துருக்கி இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டது. 

இந்த நிலையில் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து துருக்கி நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அவர் தண்டனைக்காலத்தை ஏற்கனவே கழித்துவிட்டதால், அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. தீர்ப்பு வழங்கப்பட்டதும் பாதிரியார் கண்ணீர் சிந்தி தனது மனைவி நொரினை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன், ''இந்த நாளுக்காகத்தான் எனது குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வந்தனர். நான் நாடு திரும்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என குறிப்பிட்டார். எங்கள் குடும்பம் ட்ரம்புக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளது என்றார்.  பின்னர் அவர் அமெரிக்கா திரும்பினார்.

சின்சினாட்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ட்ரம்ப், பரன்சன் விடுதலைக்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தன்னை வெள்ளை மாளிகைக்கு வந்து பரன்சன் சந்திப்பார் என ட்ரம்ப் குறிப்பிட்டார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close