பத்திரிகையாளர் கொலை: சவூதி மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா முடிவு

  Newstm Desk   | Last Modified : 14 Oct, 2018 10:05 pm
us-uk-to-boycott-saudi-international-conference

சவூதி அரசை விமர்சித்து வந்த நிருபர் ஒருவர் மாயமான விவகாரம் பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து, சவூதியில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. 

சவூதி அரசை தொடர்ந்து விமர்சித்து வந்த அந்நாட்டு நிருபர் ஜமால் கஷோகி, இந்த மாத துவக்கத்தில் மாயமானார். துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்திற்கு அவர் சென்றபின் மாயமானார். சவூதி அரசுக்கு எதிரியாக பல செய்திகளை வெளியிட்ட அவர், அமெரிக்காவின் வாஷிங்க்டன் போஸ்ட் நிறுவனத்திற்காகவும் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், சவூதி தூதராக அதிகாரிகள் அவரை கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக தகவல்கள் வெளியானது. இது உலகம் முழு பெரும் சர்ச்சையை கிளப்பியது. சவூதி அரசு நிருபரின் கொலையில் ஈடுபட்டிருந்தால், அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். 

மேலும், சவூதி அரசர் சல்மான் நடத்தும் சர்வதேச மாநாட்டை, அமெரிக்க மற்றும் பிரிட்டன் அரசுகள் புறக்கணிக்கலாம் என கூறப்படுகிறது. அமெரிக்க நிதித்துறை செயலாளர் மற்றும் பிரிட்டன் வர்த்தகச் செயலாளர் இந்த நிகழ்கிக்கு செல்லவிருந்த நிலையில், அதுகுறித்து மறுபரிசீலனை செய்வதாக தெரிய வந்துள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close