சிலந்தியை துரத்த வீட்டை கொளுத்திய அமெரிக்கர் 

  Padmapriya   | Last Modified : 26 Oct, 2018 01:40 pm
man-sets-home-on-fire-after-using-blowtorch-to-kill-spiders

கலிபோர்னியா மாகாணத்தில் தனது வீட்டிலிருந்த சிலந்திகளைக் கொல்ல இளைஞர் ஒருவர் வீட்டையும் சேர்த்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பிரஸ்னோ நகரம் உள்ளது. இங்கு வசித்து வந்த இளைஞர் ஒருவரது வீட்டில் அவ்வப்போது சிலந்திகள் வந்து தொல்லை கொடுத்து வந்தன. நீண்ட  நாட்களாக சிலந்திகளின் தொந்தரவு தாங்காத அவர் சிலந்திகளைக் கொல்ல அவற்றின் மீது தீ பற்ற வைத்ததில் அதனுடன் சேர்ந்து வீடும் பற்றிக் கொண்டு எரிந்தது. 

சம்பவம் குறித்து அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் தீயை அணைத்தனர். இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் வீட்டில் இருந்த சுமார் 10 ஆயிரம் டாலர் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியதாக கூறப்பட்டுள்ளது.  2 தீயணைப்பு வண்டிகள், 15 வீரர்கள் என அந்த அந்த நகரில் 15 நிமிட பரபரப்பை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியது. 

இந்த செயலில் ஈடுபட்ட இளைஞர் குறித்த விவரத்தை போலீசார் வெளியிடவில்லை. ஆனால் பயங்கர பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சிலந்திகளைக் கொல்ல யாரும் நெருப்பைப் பயன்படுத்த வேண்டாம் என்று கலிபோர்னியா போலீஸார் பொது மக்களிடையே பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். கலிபோர்னியாவை சுற்றிய காட்டுப் பகுதியிலிருந்து அதிக விஷப் பூச்சுகள் வருவது வழக்கம். அவற்றை விரட்ட யாரும் தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் என்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்புகொள்ளவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close