அமெரிக்கா: 800 அடி பள்ளத்தாக்கில் விழுந்து கேரள ஜோடி உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 30 Oct, 2018 02:24 pm
us-kerala-couple-die-tragically-after-falling-from-800-ft

அமெரிக்காவின் பிரபல யோசெமிட்டி தேசிய பூங்காவை சுற்றி பார்க்க சென்ற இந்திய தம்பதியினர், 800 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்தனர். 

கேரளாவை சேர்ந்த விஷ்ணு விஸ்வநாத், தனது மனைவி மீனாக்ஷியுடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு சமீபத்தில் குடிபெயர்ந்தார். அடிக்கடி சுற்றுலா செல்லும் இருவரும், மலைகளில் நின்று எடுத்துக்கொண்ட பல்வேறு புகைப்படங்களை தங்களது பேஸ்புக் பக்கங்களிலும், ப்ளாகிலும் பதிவு செய்து வந்தனர். சமீபத்தில், பிரபல யோசிமிட்டி தேசிய பூங்காவிற்கு இருவரும் சென்றதாக தெரிகிறது. அப்போது, அங்குள்ள 800 அடி பள்ளத்தாக்கில் இருந்து இருவரும் விழுந்தனர். 

டாஃப்ட் பாயிண்ட் என்ற இடத்திற்கு கீழே அவர்களது உடல்களை கடந்த வியாழனன்று பூங்கா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்கள் கேரளாவை சேர்ந்த தம்பதி என நேற்று அடையாளம் காணப்பட்டது. யோசிமிட்டி தேசிய பூங்காவின் முக்கிய பகுதிகளை டாஃப்ட் பாயிண்ட்டில் இருந்து பார்க்க முடியும் என்பதால், சுற்றுலா பயணிகள் அங்கு புகைபடம் எடுக்க வருவது வழக்கம். அந்த இடத்தில், இரண்டு பேரும் எப்படி விழுந்து இறந்தனர் என்பதை தீவிரமாக விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளார்.

"அவர்களுக்கு என்ன ஆனது என எங்களுக்கு தெரியவில்லை. கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். அங்கு என்ன நடந்தது என்று நமக்கு தெரியாமலே கூட போகலாம். ஆனால், தற்போதைக்கு இது எதிர்பாராத விதமாக நடந்த துயரச் சம்பவம் என கருதுகிறோம்" என பூங்காவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close