அமெரிக்காவில் பிறந்தாலும் குடியுரிமை கிடையாது: ட்ரம்ப் அதிரடி

  டேவிட்   | Last Modified : 31 Oct, 2018 03:40 pm
american-citizenship-trump

அமெரிக்காவில் குடியுரிமை இல்லாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை வழங்கபடாது எனும் புதிய உத்தரவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியுரிமை இல்லாமல் அமெரிக்காவுக்குச் செல்பவர்களுக்கு அங்கு குழந்தை பிறக்குமாயின் அக்குழந்தைகள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களாவார்கள். வழக்கமான இந்தக் குடியுரிமைத் திட்டத்தையும் ஒழிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க இடைத் தேர்தலுக்கு முன்  குடிபெயர்ந்தவர்களுக்காக விதிக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, குடியுரிமை இல்லாது அமெரிக்காவுக்கு குடியேறிய பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை கிடையாது என்ற புதிய உத்தரவை விதிக்க விரும்புகிறேன் எனவும், முடிவை வெள்ளை மாளிகை வழக்கறிஞர் பரீசிலனை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். .

இந்த உத்தரவு எப்போது பிறப்பிக்கப்படும் என்ற தகவலை டிரம்ப் உறுதியாக கூறவில்லை. அமெரிக்க அரசியலைப்பு சட்ட 14-வது திருத்தத்தின்படி, அந்நாட்டில்  பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான முழு உரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close