'குடியரசுதின விழாவில் பங்கேற்க ட்ரம்ப்புக்கு அதிகாரபூர்வ அழைப்பு வரவில்லை '

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 11:09 am
no-formal-invite-was-sent-to-donald-trump-for-republic-day-visit-report

2019 ஆம் நடக்க உள்ள குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு, இந்திய அயலுவுத்துறையிடமிருந்து  இன்னமும் அதிகாரபூர்வ அழைப்பு வரவில்லை என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளை மாளிகையின் ஊடகத்துறை செயலாளர் சாரா சாண்டர்ஸ் அளித்த பேட்டியில், ''2019-ம் ஆண்டு இந்தியாவின் குடியரசு தின விழாவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்திய அரசு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது'' என்று கூறினார். 

இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் இந்தியாவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க மாட்டார், இந்தியாவின் அழைப்பை அதிபர் ட்ரம்ப் நிராகரித்துவிட்டார் என்று செய்திகள் இரு தினங்களாகவே வெளியாகின. இந்நிலையில் இந்தியாவின் அழைப்பை அதிபர் ட்ரம்ப் மறுத்துவிட்டார் என்ற செய்தியை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ''2019-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இந்தியாவின் குடியரசு தின விழாவில் பங்கேற்கவும், சிறப்பு அழைப்பாளராகவும் அதிபர் ட்ரம்ப்பை, இந்தியப் பிரதமர் மோடி அழைத்துக் கவுரவித்திருந்தார். ஆனால், அதிபர் ட்ரம்ப்புக்கு அந்தத் தேதியில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் உள்ளன. பணி நெருக்கடி காரணமாக, இந்திய குடியரசு தின விழாவில், அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்க மாட்டார்' என, வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று, 'குடியரசு தின விழாவில் பங்கேற்கும்படி, மத்திய அரசின் சார்பில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அதிகாரபூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை' என அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close