இந்தியா மீது தடை இல்லை! - ஈரான் விவகாரத்தில் பின்வாங்கிய அமெரிக்கா

  Padmapriya   | Last Modified : 03 Nov, 2018 12:45 pm

trump-will-grant-8-waivers-to-buy-iranian-oil-allowing-imports-beyond-us-sanctions-deadline

தற்காலிகமாக இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா விடுத்திருந்த கெடு விலக்கிக் கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

பின் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

அதோடு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். ஆனால் அமெரிக்கா நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகும் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

ஆனால் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அமெரிக்கா மீண்டும் மிரட்டல் விடுத்தது. 

இந்த நிலையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு தற்காலிகமாக அமெரிக்க விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதனை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.  ஈரான் ஈட்டும் பணத்தை தீவிரவாதத்துக்கு செலவிட்டு வருகிறது என நாங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறோம். அமெரிக்காவின் இந்த இலக்கில் எந்த மாற்றமும் இல்லை. எனவே அந்த நாடு நிதி குவிப்பதை தடுக்க முயன்று வருகிறோம். ஈரானிடம் இருந்து நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அறிவித்து இருந்தோம். ஆனால் சர்வதேச சூழலை கருத்தில் கொண்டு ஈரானிடம் இருந்து 7 நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாக அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளும் விரைவில் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நீண்ட நாட்களுக்கு இதனை தொடர முடியாது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் மட்ட தகவல்கள் கூடுகின்றன. 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.