துப்பாக்கிச்சூடு நடந்த ஃப்ளோரிடா மாகாணத்தில் ட்ரம்ப் பிரச்சாரம் 

  Padmapriya   | Last Modified : 04 Nov, 2018 11:21 am
president-trump-visits-pensacola-in-support-of-republican-candidates

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பென்சாகோலாவில் குடியரசு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டார். 

வர இருக்கும் இடைக்கால தேர்தலில் ஃப்ளோரிடாவிலிருந்து செனெட் சபைக்கு போட்டியிடும் அம்மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட் முன்னாள் சபை உறுப்பினர் ரான் டேசான்டிஸ் ஆகியோரை முன்னிறுத்தி ட்ரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அப்போது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் மைக்கேல் புயலால் சின்னாபின்னமான ஃப்ளோரிடா மாகாணத்தின் மறுசீரமைப்பு, பொருளாதார வளர்ச்சி, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசினார்.  இதனையே அவர் மோன்டானா பிரசார அணிவகுப்பிலும் பேசினார். 

அதே போல ஜனநாயக கட்சியின் பில் நெல்சன் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சிக்கும் உணவு உபசரிப்புக்கும் ஏற்பாடு செய்து பங்கேற்றிருந்தார். 

முன்னதாக ஆளுநருக்கான பதவிக்கு போட்டியிடும் டேல்லாஹெஸ் மேயர் ஆண்ட்ரு கில்லியம் இந்த பிரசாரக் கூட்டத்தில் பங்குகேற்க இருந்தார். ஆனால் ஃப்ளோரிடா ஸ்டூடியோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டை அடுத்து அதில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்திக்க சென்றதால் அவர் இதில் பங்கேற்கவில்லை. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close