போல்சோனரோ தலைமையில் பிரேசில் அரசியலமைப்பின் 30வது ஆண்டு விழா

  Padmapriya   | Last Modified : 07 Nov, 2018 10:14 am
bolsonaro-celebrates-30th-anniversary-of-brazil-s-constitution

பிரசிலில் அரசியலமைப்பு இயற்றப்பட்டு 30வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் விரைவில் அந்நாட்டு அதிபராக பதவியேற்க உள்ள ஜெய்ர் போல்சோனரோ தலைமையேற்று உரையாற்றினார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசில் நாட்டில் கடந்த 2003 முதல் 2016 வரை 13 ஆண்டுகள் பி.டி. கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அக்கட்சியின் சார்பில் அதிபராக பதவிவகித்து வந்த டில்மா ரவுசெப் கடந்த 2016-ம் ஆண்டில் பதவியிறக்கம் செய்யப்பட்டார்.

இதைதொடர்ந்து, கடந்த இரண்டாண்டுகளாக பழமைவாதியான மைக்கேல் டேமர் இடைக்கால அதிபராக பதவி வகித்தார். பின், அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் சோசலிச விடுதலை கட்சியை சேந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஜெய்ர் போல்சோனரோ 55.2 சதவீதம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார். பிரேசில் அதிபராக போல்சோனரோ 2019ஆம் ஜனவரி முதல் தேதியில் பதவியேற்கிறார். 

இந்த நிலையில் பிரேசிலின் அரசியலமைப்பு இயற்றப்பட்டு  30வது ஆண்டு விழா கொண்டாட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற போல்சோனரோ பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். ''நாம் பிரேசிலை கட்டமைக்கும் பணியை மேற்கொள்வோம். நம் நாட்டு மக்கள் அதனை மேற்கொள்வார்கள். மிகப் பெரிய நாடாக உருவெடுக்க தேவையான அனைத்தும் நம்மிடம் உள்ளது'' என்றார். 

Newstm.in 


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close