அமெரிக்க தேர்தல் முடிவுகள்: நாடாளுமன்ற கீழ் சபையை இழந்தது ட்ரம்ப் கட்சி

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 05:03 pm
us-election-results-democrats-win-house-republicans-hold-the-senate

அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நாடாளுமன்ற இரு சபைகளையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசு கட்சி, கீழ் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியிடம் இழந்துள்ளது. 

நாடாளுமன்றன கீழ் சபையின் 435 இடங்களுக்கும், மேல் சபையான செனட் சபையின் 35 இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன், கீழ் சபையில் 194 இடங்களை மட்டுமே தங்கள் வசம் வைத்திருந்த ஜனநாயக கட்சி, 223 இடங்களுக்கும் மேல் வென்று, பெரும்பான்மையை அடைந்துள்ளது. 

அதேநேரம், மேல் சபையான செனட் சபையில் உள்ள 35 இடங்களில், தங்கள் வசமிருந்த 26 இடங்களில் ஜனநாயக கட்சி போட்டியிட்டது. குடியரசு கட்சி வெறும் 9 இடங்களிலேயே போட்டியிட்டது. அதனால், தங்கள் வசமிருந்த 51 இடங்களை தக்க வைத்துள்ளதோடு, வாக்கு எண்ணிக்கை முடியாத மேலும் இரண்டு இடங்களை குடியரசு கட்சி வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால், கீழ் சபையை ஜனநாயக கட்சியும், மேல் சபையை குடியரசு கட்சியும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப்பின் வருங்கால திட்டங்களுக்கு இது பெரும் தடையாக அமையும் என கூறப்படுகிறது. மேலும், பதவியேற்ற பின், அவர் மீது பல்வேறு விசாரணைகளை எதிர்க்கட்சிகள் துவக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல 36 மாகாணங்களில் நடைபெற்ற ஆளுநர் தேர்தல்களில், ஜனநாயக கட்சி ஏற்கனவே வைத்திருந்த இடங்களுடன், மேலும் 7 குடியரசு கட்சி மாகாணங்களை கைப்பற்றியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close