அமெரிக்க தேர்தலில் பறிபோன 'ட்ரம்ப்' கார்டு....2 கட்சிகளும் தனித்தனியே சரிபாதி வெற்றி

  Padmapriya   | Last Modified : 07 Nov, 2018 06:20 pm

democrats-were-on-track-to-capture-control-of-the-house-of-representatives

அமெரிக்காவில் நடந்து முடிந்திருக்கும் இடைக்காலத் தேர்தலில் நாடாளுமன்ற கீழ் சபையை ஜனநாயகக் கட்சியும் செனட் சபையை குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் கைப்பற்றியுள்ளனர். அந்நாட்டின் கீழ் சபையை ஜனநாயக கட்சி இடம் பரிகொடுத்ததன் மூலம் அதிபர் ட்ரம்பின் ஆட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

இது போலான தேர்தல் வெற்றி நிலவரம் கடந்த எட்டு ஆண்டுகள் அமெரிக்க அதிபர்களின் ஆட்சியில் நடந்ததில்லை என்று சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. 

அமெரிக்காவில் நாடாளுமன்ற, மாகாண தேர்தல்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்தன. அமெரிக்க நாடாளுமன்றம் என்பது செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டது. நாடாளுமன்ற கீழ் சபையில் உள்ள அனைத்து (435) உறுப்பினர்களுக்கும், 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையில் பதவிக்காலம் முடிவடையும் 35 செனட் இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. 

வழக்கமாக அதிபர் தேர்தலுடன் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும். இந்த முறை அதிபர் தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த தேர்தல் நடைபெறுவதால் இடைக்கால தேர்தல் என ஊடகங்கள் இந்த தேர்தலை குறிப்பிட்டு வருகின்றன. கூடவே, 36 மாநில ஆளுநர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இதில் கீழ் சபையை ஜனநாயகக் கட்சி பெரும்பாலும் கைப்பற்றினாலும் செனட் சபையில் குடியரசு கட்சி ஆதிக்கம் செலுத்தக் கூடிய வகையில் வித்தியாசமான வாய்ப்பை இந்தத் தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோல, கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தல்களில் இம்முறைதான் மிக அதிக அளவு வாக்குப்பதிவு நடந்திருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடக்கம் முதலே, இந்த இடைக்கால தேர்தலில் மிக அதிக அளவில் வாக்குப்பதிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்காவில் பொதுவாகவே தேர்தல் கூட்டத்தையும் நெரிச்சல் அச்சவுகரிங்களை குறைக்கவும், தேர்தலுக்கு முந்தைய வாரமே வாக்காளர்கள் ஓட்டு போட ஏற்பாடுகள் செய்யப்படும். அதுபோல, தேர்தலுக்கு முன்னதாகவே நடைபெற்ற வாக்குப்பதிவில், இதுவரை இல்லாத அளவு, 3.6 கோடி பேர் வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பறிபோன 'ட்ரம்ப்' கார்டு....

அமெரிக்க அதிபர்களிலேயே அதிகம் சர்ச்சையில் சிக்கியவர் என்றால் அது ட்ரம்ப் தான். ட்விட்டரில் சண்டை போடுவது, சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்வது, சீனாவுடன் அவர் நடத்தி வரும் வர்த்தகப் போர், மெக்சிகோவுடன் வாய்ச் சண்டை, அவர் மீது சிறப்பு கமிஷன் நடத்தி வரும் விசாரணை, ஆபாச நடிகையுடன் தொடர்பு, என சொல்லிக் கொண்டே போகலாம். அதுமட்டுமல்லாமல், அவருக்கு நெருக்கமான அதிகாரிகள், உயர்மட்ட அரசு அதிகாரிகள் வரலாறு காணாத அளவு தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தனது மகள், மருமகனை அரசுக்குள் கொண்டு வந்து முக்கிய பதவிகள் வழங்கியதும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

கருத்துக்கணிப்புகளில் அவர் மீதான மக்கள் அபிமானம் 39 சதவீதமாக அதலபாதாளத்தில் உள்ளது. முதல் இரண்டு ஆண்டுகளில் முந்தைய அதிபர் யாருமே இவ்வளவு குறைந்த அளவு மக்கள் அபிமானத்தை கொண்டிருந்ததில்லை என கூறப்பட்ட சூழலில் ட்ரம்ப்பின் கடந்த 2 ஆண்டுகால ஆட்சியின் ரிப்போர்ட் கார்டு தான் இந்த இடைக்கால தேர்தல். 

இறுதி நேர நிலவரத்தின்படி-  கன்சாஸ், பிலடெல்பியா, பிட்ஸ்பெர்க், மியாமி, மினியாப்பொலிஸ், வாஷிங்டன் என 13 குடியரசுக் கட்சிகளின் இடங்களை ஜனநாயக கட்சியினர் கைப்பற்றியுள்ளனர். கீழ் சபையை ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெர்ரோதன் பெற்றதன் மூலம், இனி அவர்களால் ட்ரம்ப்பின் அனைத்து நடவடிக்கைகள் மீதும் அதிகாரபூர்வமாக கேள்வி எழுப்ப முடியும். அதே போல, முக்கியமான சில வரையறை செய்யப்பட்ட முடிவுகளுக்கு கீழ் அவை உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டியதிருக்கும். 

அதேபோல செனட் சபையில் பெரும்பான்மையான இடங்களை குடியரசு கட்சி பெற்றுள்ளது. ப்ளோரிடா, டெக்சாஸ், டென்னிசி ஆகிய இடங்களை குடியரசுக் கட்சியிடமிருந்து ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. வடக்கு டகோட்டா, இண்டியானா ஆகிய இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். 

அதேசமயம், இரண்டு முக்கிய ஆளுநர் பகுதிகளை இரண்டு கட்சிகளும் சரிசமமாக வெற்றி பெற்றுள்ளன. மிச்சிகனில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த க்ரெட்சென் விட்மரும்,  இல்லினாய்ஸில் ஜெ.பி பிரிட்ஸ்கர் என்ற ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும் ஹயாத் ஓட்டல் வாரிசுமானவர் வெற்றிப் பெற்றுள்ளார். 

செனட் அவைக்கான தேர்தல் முடிவின்படி - ஓஹியோ, விஸ்கொன்சின், பென்சில்வேனியா மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி வெற்றிப் பெற்றுள்ளது. இருப்பினும் அரிசோனா, நெவாடா மற்றும் மொன்டானா ஆகிய மாநிலங்களில் வெற்றி நிலவரம் இன்னும் அறியப்படாமல் உள்ளது. 

இந்த நிலவரங்களின் தாக்கமாக அமெரிக்க டாலர் மதிப்பு காலை முதலே சரிவை நோக்கியுள்ளது. அந்நாட்டு பங்குகளும் வீழ்ச்சிக் கண்டு வருகிறது. சரிபாதி வெற்றியை இரு பிரதானக் கட்சிகளும் பெற்றிருப்பது மக்கள் அரசின் மீது கொண்டிருக்கும் அவநம்பிக்கையை பிரதிபலிப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முடிந்த அளவில் இந்த சரிபாதி வெற்றியைக் கொண்டு, அமெரிக்காவால் உருவெடுத்திருக்கும் வர்த்தகப் போரையும் எல்லை வரையறை என்ற பெயரிலான மனித உரிமை மீறலையும், இனவெறி ரீதியிலான மோதல்களையும் சரி செய்ய வாய்ப்பாக கொண்டு குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் செயல்பட வேண்டும் என்பதே பிரதான எதிர்பார்ப்பு. 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.