ஈரானில் இந்தியா உருவாக்கும் சபஹர் துறைமுகத்துக்கு அமெரிக்கா விலக்கு!

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 04:56 am
chabahar-port-to-be-exempted-from-us-sanctions

ஈரானின் சபஹர் துறைமுக திட்டம் மற்றும் சபஹர்- ஜஹேதன் ரயில்வே திட்டத்தில் இந்தியா முக்கிய பங்காற்றி வரும் நிலையில், அதன் மீது பொருளாதார தடைகளை விதிப்பதில் இருந்து விலக்கு அளித்துள்ளது அமெரிக்க அரசு. 

ஈரானுக்கு எதிராகவும், அந்நாட்டுடன் பொருளாதார அளவில் உறவு வைத்திருக்கும் உலக நாடுகள் மீதும், அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்க இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுத்துவரும் நிலையில், ஈரானுடன் நெருக்கமான உறவை வைத்திருந்த இந்தியாவுக்கும் நெருக்கடி எழுந்தது. 

முக்கியமாக, ஈரானில், இந்தியா மேம்படுத்தி வரும் சபஹர் துறைமுக திட்டத்தை, அமெரிக்க பொருளாதார தடைகள் பாதிக்க வாய்ப்பிருந்தது. சபஹரில் இருந்து, ஆப்கானிஸ்தானுக்கு ரயில்வே திட்டம் ஒன்றையும் இந்தியா உருவாக்கி வருகிறது. இந்த இரு திட்டங்களும், போரால் சிதைந்துபோன ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்புக்கும், வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என கூறப்படுகிறது. இதனால், இத்திட்டத்திற்கு அமெரிக்க பொருளாதார தடைகளில் இருந்து விலக்கு வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

சமீபத்தில், ஈரான் மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் மீண்டும் கொண்டு வந்த அமெரிக்கா, சபஹர் திட்டத்திற்கு, இந்த தடைகளில் இருந்து தற்போது விலக்கு அளித்துள்ளது. 

நீண்ட ஆலோசனைக்கு பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பேயோ இந்த முடிவுக்கு வந்ததாக வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close