அமெரிக்கா: பாரில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு; 13 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 05:44 pm

us-bar-shooting-13-dead

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு பாரில் கூடியிருந்த மக்கள் மீது, திடீரென மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 13 பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், என தெரிய வந்துள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு பார் மற்றும் க்ளப்பிற்குள் மர்ம நபர் துப்பாக்கியுடன் புகுந்தார். நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த அந்த கிளப்பில், திடீரென கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.

கல்லூரி மாணவர்களுக்காக அந்த க்ளப்பில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அங்கு நூற்றுக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் அங்கு உடனடியாக புகுந்து, துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில், ஒரு மூத்த போலீஸ் அதிகாரி படுகாயமடைந்து உயிரிழந்தார். அந்த நபர் குறைந்தபட்சம் 30 முறையாவது சுட்டதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்தனர். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.