தலையில்லாமல் வாழும் அதிசய கோழி!!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 29 Mar, 2018 07:35 pm

தாய்லாந்தில் தலை வெட்டப்பட்ட கோழி ஒன்று உயிருடன் வாழ்ந்து வருகிறது. தலையில்லாத அந்த கோழியை கால்நடை மருத்துவர் ஒருவர் பராமரித்து வருகிறார்.

தாய்லாந்தில் ரத்சபுரி மாகாணத்தில் தான் தலை வெட்டப்பட்ட இந்த அதிசய கோழி உள்ளது. கோழியின் தலை எப்படி வெட்டப்பட்டது என சரியாக தெரியாத நிலையில் வேறு எதாவது உயிரினம் அதை தாக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. ஒரு வாரத்துக்கு முன்னர் தலை வெட்டப்பட்டிருக்கலாம் என கோழியை பராமரிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக கடைகளிலும், கோயில் திருவிழாவிலும் கோழியின் தலையை வெட்டப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். பொதுவாக கோழியின் தலையை அறுத்தவுடன் அதன் உடல் சுருண்டு தரையில் விழுந்து இறந்துவிடும். ஆனால் தலை இல்லாமல் ஒரு உயிரினத்தால் வாழ முடியுமா? முடியும் என்பதை காட்டியுள்ளது இந்த அதிசய கோழி.

கோழியின் தலை இருக்க வேண்டிய இடத்தில் ரத்தக்கறை படிந்திருக்கும் நிலையில், அது எப்படியோ எழுந்து நிற்கிறது. மெதுவாக நடக்கிறது. இதையடுத்து சுபகாடி அருண் தொங் என்னும் கால்நடை மருத்துவர் தான் இந்த கோழியை பராமரித்து வருகிறார். அதற்கு உணவுகள் கொடுத்து வருவதோடு, ஆண்டிபயாடிக் மாத்திரைகளையும் அருண் கொடுத்து வருகிறார்.

மருத்துவர் அருண் கோழி குறித்து கூறுகையில், "கோழிக்கு வாழ்க்கை இன்னும் உள்ளது. அது சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைக்கிறது. கோழியை யாராவது எடுத்து வளர்ப்பார்கள் என நம்புகிறேன், அதன் வாழ்நாள் முழுவதும் பராமரிக்க யாராவது உதவுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கோழிக்கு மனதில் மிகுந்த தைரியம் உள்ளது. இந்த கோழி கடுமையான இதயம் கொண்ட உண்மையான போர்வீரன்" என கூறுகிறார்.

கடந்த 1945-லிருந்து 1947 வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்காவில் மைக் என்னும் கோழி தலையில்லாமல் 18 மாதங்கள் உயிருடன் இருந்த நிலையில், அதுவே அதிக காலம் தலையில்லாமல் வாழ்ந்த கோழி என கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close