மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு வீண் செலவுதான்: ட்ரம்ப் ஆவேசம்

  Padmapriya   | Last Modified : 30 Mar, 2018 12:32 pm

சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் விரைவில் வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஓஹியோவில் உள்கட்டமைப்பு குறித்த மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அங்கு சிரியா சூழல் குறித்த விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.

நாடு திரும்புவோம்: சிரியாவிலிருந்து நாம் வெகு சீக்கிரம் நாடு திரும்புவோம். ஐஎஸ் கூட்டை நாம் அப்புறப்படுத்தி வருகிறோம். இனி, அதன் மக்களே அவர்களைப் பார்த்துக்கொள்ளட்டும். காலிபத் நாடு அல்லது நிலம், எப்படிக் கூறிக் கொள்கிறார்களோ அதை அவர்களே தீர்மானிக்கட்டும். நாம் நமக்கு சொந்தமான நாட்டுக்கு வருவோம். நாம் வாழ வேண்டியது இங்கு தான் என்றார் ட்ரம்ப்.

செலவானது தான் மிச்சம்: மேலும் அவர் பேசுகையில், "இதுவரை நாம் மத்திய கிழக்கு நாடுகளின் சூழலுக்காக பல லட்ச கோடிக்கணக்கான டாலர்களை செலவழித்துள்ளோம். நாம் பள்ளிக்கூடங்கள் கட்டினால், அவர்கள் தகர்த்து எரிவார்கள். நாம் கட்டுவோம், அவர்கள் தகர்ப்பார்கள். திரும்பவும் கட்டுவோம், தகர்ப்பார்கள். மறுபடியும் கட்டுவோம், தகர்ப்பார்கள். ஆனால் இங்கு ஓஹியோ பள்ளிகளுக்கு ஜன்னலில் கண்ணாடி மாட்டக் கூட உடனடியாக நிதி ஒதுக்க முடியாது.

வளங்களே முக்கியம்: எப்போதும் நான் கூறுவது, வளங்களே முக்கியம். எண்ணை தான் நமது வளம். அதை நாம் தவறவிட்டோம். ஆனால் ஐஎஸ் அதை பாதுகாத்தது. அதன் வளத்தை தன் வசமே வைத்துக் கொண்டது. அது தான் அவர்களுக்கு சொத்து, பலம் எல்லாம். ஆனால் நாம் தவறிவிட்டோம். அதன் பலன், நம்மிடம் நமது வசதிகளுக்காக கொஞ்சம் பணம் மட்டுமே உள்ளது. நாம் நமது ராணுவத்தையும் பாதுகாக்க வேண்டும். அது தற்போது மேலும் பலத்துடன் தான் உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காகவே எதிர்க்கட்சிகளை ஒன்றுகூட சொல்கிறேன்" என்றார்.

முன்னதாக, அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் டனா வைட், நாம் ஐஎஸ் படையை நமது கூட்டுடன் சேர்ந்து வீழ்த்திவிட்டோம். அவர்களை அங்கிருந்து ஒழிப்பதோடு நமது கடமை முடியும் எனக் குறிப்பட்டிருந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close