கலிபோர்னியா காட்டுத் தீ : டிரம்ப் நேரில் ஆய்வு

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2018 01:24 pm
california-wild-fire

கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிபர் டிரம் நேரில் பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறினார். 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சியோர்ரா நெவேடா மலையடிவாரத்தில் கடந்த 8ம் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவியதால், அருகில் உள்ள பாரடைஸ் நகரை சூழ்ந்தது. இதனால் சுமார் 10 ஆயிரம் வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. 52 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டுத் தீ கலிபோர்னியா வரலாற்றில் மிகப்பெரிய காட்டுத் தீயாக கருதப்படுகிறது. இந்த காட்டுத் தீயில் சிக்கி 76 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தீ சூழ்ந்த பகுதிகளில் வாழந்து வந்த 1,000க்கும் மேற்பட்டோரை காணவில்லை என அவர்கள் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வாஷிங்டன் நகரில் இருந்து தனி விமானம் மூலம் இன்று கலிபோர்னியா  வந்தடைந்தார். அங்குள்ள பியேல் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை டிரம்ப் ஆய்வு செய்தார். மேலும், அதிகம் பாதிக்கப்பட்ட பாரடைஸ் நகரை பார்வையிட்ட அவர்,   உடைமைகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

கலிபோர்னியா காட்டுத்தீ விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணமல் போனது, பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close