உருகுவேவில் அடைக்கலம் கோரிய பெரு நாட்டு முன்னாள் அதிபர்

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2018 03:51 pm
peru-says-ex-president-has-sought-asylum-in-uruguay

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஏலன் கார்ஸியா, உருகுவேவில் அடைக்கலம் கோரியதாக அந்நாட்டு தூதரகத்தில் கூறியுள்ளது. 

பெரு அதிபராக இருந்தபோது ஏலன் கார்ஸியா, பிரேசில் கட்டுமான பெரும் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் அளிக்க 800 லட்சம் டாலர் லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை கார்ஸியா மறுத்துள்ளார். 

மேலும், இந்த குற்றச்சாட்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறினார். இதனிடையே அவர் நாட்டைவிட்டு வெளியேற பெருவில் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட் விரைவில் முடக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்த தடைக் காலம் இன்னும் 18 மாதங்கள் ஆகும். 

இத்தகைய சூழலில் அவர் தொடர்ந்து உருகுவேயில் அடைக்கலம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close