பாகிஸ்தானுக்கு இனி நிதி ரத்து: தீவிரவாத விவகாரத்தில் கொதித்தெழுந்த ட்ரம்ப் 

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2018 12:05 pm
done-nothing-to-help-us-trump-on-stopping-1-3-billion-aid-to-pakistan


தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றும் செய்யாத பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதற்காக நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பு அதனை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

''தீவிரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் பாகிஸ்தானுக்கு, இனி ஒருபோதும் நிதியுதவி அளிக்க முடியாது,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.  பாகிஸ்தானில், மறைந்து வாழும் தீவிரவாதிகளையும் சுதந்திரமாகச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளையும் கட்டுப்படுத்தி, ஒழிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரித்து வருகிறது. 

இந்த விவகாரத்தில், பாகிஸ்தான் மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்ற இம்ரான் கானும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. 

இது குறித்து வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் பேசுகையில், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்தவும், அவற்றை ஒழித்துக் கட்ட, எங்களுக்கு உதவும்படியும், அந்நாட்டு அரசிடம் கூறியிருந்தோம். இந்த விஷயத்தில், எங்களுக்கு பாகிஸ்தான் உதவவில்லை. இதுவரை இதற்காக பாகிஸ்தான் எங்களுக்கு ஒன்றுமே செய்ததில்லை. அப்படி இருக்கும்போது, பாகிஸ்தானுக்கு ராணுவ நிதி உதவியாக அளிக்கப்படும், 9,360 கோடி ரூபாயை வழங்க முடியாது.

அபோட்டாபாதில், பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் வசித்தது குறித்து எங்களுக்கு தகவல் கூட பாகிஸ்தான் அளிக்கவில்லை. ஆனால், எங்களிடம் இருந்து கோடிக் கணக்கான உதவிகளை மட்டும் காலங்காலமாக பெறுகின்றனர். பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டாமல் ஆதரவு தெரிவிக்கும் பாகிஸ்தானுக்கு, இனி ஒருபோதும் நிதியுதவி அளிக்க முடியாது'' என்றார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close