கலிபோர்னியா காட்டுத் தீ; பலி எண்ணிக்கை 83 ஆக உயர்வு

  டேவிட்   | Last Modified : 22 Nov, 2018 12:19 pm
california-wildfire-death-toll-rises-to-83

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீயால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளன. 

அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணமான கலிபோர்னியாவின் வடக்கு பகுதியில், கேம்ப் பயர் என்ற இடத்தில் இருந்து பயங்கர காட்டுத் தீ உருவானது. இந்த காட்டுத் தீ தொடர்ந்து பரவி, பல்லாயிரம் கோடிக்கணக்கான சொத்துக்களை சேதம் செய்தது. 13500 வீடுகள் மற்றும் சுமார் 500 கடைகளும் இந்த காட்டுத் தீக்கு இரையாகி உள்ளன. மேலும், 62,052 ஹெக்டேர் பரப்பளவு நாசமாகியுள்ளதாகவும், தற்போது 85% தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், கலிபோர்னியாவின் வனத்துறை அறிவித்துள்ளது.  நவம்பர் 8ம் தேதி துவங்கிய இந்த காட்டுத்தீயால் இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விபத்து நடந்த இடத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தி மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். அடிக்கடி காட்டுத் தீ ஏற்படும் கலிபோர்னியாவின் சரித்திரத்திலேயே இதுதான் மிக பயங்கரமான காட்டுத்தீயாகும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close