விபத்தில் சிக்கிய அமெரிக்க அதிபரின் விமானம்!

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 04:51 pm
trump-s-private-jet-clipped-at-laguardia

 

நியூயார்க்கின் லகார்டியா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தனி விமானத்தின் மீது மற்றொரு விமானம் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பிரசாரத்துக்காக டொனால்ட் ட்ரம்ப் தனி ஜெட் விமானத்தை பயன்படுத்தி வந்தார். அவர் அதிபராக பதவியேற்றபின் அந்த விமானத்தை பயன்படுத்தவில்லை. அந்த விமானம் நியூயார்க்கில் உள்ள லகார்டியா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் ட்ரம்ப்பின் தனி விமானத்தின் இறக்கை மீது விமானம் ஒன்று லேசாக மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்த இந்த விபத்து குறித்து விமான நிலைய நிர்வாகம் 
தரப்பில், வெள்ளை மாளிகைக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இதுகுறித்து அமெரிக்க அரசு நிர்வாகத்தின் சார்பில் உடனே விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. அதேசமயம், இந்த விபத்தில் டொனால்ட் டிரம்பின் விமானம் சிக்கியதை உறுதிசெய்ய மறுத்த விமான 
நிலைய நிர்வாகம், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என மட்டும் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close