ஜி20 மாநாட்டில் ட்ரம்ப் - புடின் சந்திப்பு!

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 08:17 pm
trump-putin-to-meet-in-g20-summit

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, அர்ஜென்டினாவில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ரஷ்யா தரப்பில் கூறப்படுகிறது. 

உக்ரைன் நாட்டின் இரண்டு போர்க்கப்பல்கள் உட்பட 3 கப்பல்களை, ரஷ்ய படைகள் சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றினர். ஏற்கனவே உக்ரைனின் க்ரைமியாவை ஆக்கிரமித்த ரஷ்ய அரசு, தொடர்ந்து அத்துமீறுவதாக சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உக்ரைன் நிலைமையை பற்றிய முழு விவரங்கள் அறிந்தபின், புடினுடன் திட்டமிட்ட சந்திப்பை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கப்படும், என தெரிவித்தார். 

இதுகுறித்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, புடின் - ட்ரம்ப் சந்திப்பு நடைபெறாது என கூறினார். இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடினின் உதவியாளர் அந்நாட்டு அரசு ஊடகத்திடம், இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். அர்ஜென்டினா தலைநகர் புவேனோஸ் எய்ரஸில் உள்ள பார்க் ஹயாத் ஓட்டலில், சுமார் இரண்டு மணி நேரம் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. 

வெள்ளை மாளிகை மறுத்துவரும் நிலையில், ரஷ்யா தரப்பில் ட்ரம்ப் புடின் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close