மேரியட் ஓட்டல் ஹேக்; 50 கோடி பேரின் தகவல்கள் திருட்டு!

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 06:48 am

marriott-hotel-hack-50-crore-customer-data-affected

சர்வதேச அளவில் மிகப்பெரிய ஓட்டல் நிறுவனங்களில் ஒன்றான மேரியட் இன்டர்நேஷனல் குழுமத்தின் சர்வர் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் சுமார் 50 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை உட்பட உலகின் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான நட்சத்திர ஓட்டல்களை இயக்கிவரும் நிறுவனம் மேரியட். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டார்வுட்ஸ் ரிசர்வேஷன் என்ற டேட்டாபேஸ் தற்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு, மேரியட் நிறுவனம் ரெஜிஸ், வெஸ்டின், ஹோட்டல் ஷெரட்டன், டபிள்யு ஹோட்டல், லீ மெரிடியன் உள்ளிட்ட மிகப்பெரிய 5 நட்சத்திர ஓட்டல்களை வாங்கி, தனது வியாபாரத்தை விரிவுபடுத்தியது. இதனால் இந்த அனைத்து ஓட்டல்களின் வாடிக்கையாளர்கள் விவரங்களை ஸ்டார்வுட்ஸ் ரிசர்வேஷன் நிர்வகித்து வந்தது. தற்போது ஸ்டார்வுட்ஸ் ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில், பதிவேட்டில் உள்ள வாடிக்கையாளர்களில், மூன்றில் இரண்டு பங்கு பேருடைய விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதில் பெயர்கள், முகவரிகள் தொலைபேசி எண்கள், ஈமெயில் ஐடி, பாஸ்போர்ட் எண், பயண விவரங்கள் உள்ளிட்டவை திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. டெபிட் கார்டு விவரங்கள் கூட திருடு போயிருக்க வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. "எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை எங்களால் இந்தமுறை காப்பாற்ற முடியவில்லை. இந்த சமயத்தில் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தரவும், அனைத்தையும் சரி செய்யத் தயாராக இருக்கிறோம். இதை வைத்து மேலும் பாதுகாப்பை அதிகப்படுத்தி, மேலும் சிறந்து விளங்க முயற்சிக்கிறோம்" என அந்த நிறுவனத்தின் செயல் தலைவரான அர்னே சோரென்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close