200 முறைக்கும் மேல் அதிர்ந்த அலாஸ்கா மாகாணம் !

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 03:21 pm

alaska-hit-by-over-230-aftershocks-after-massive-temblor

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கடந்த இரண்டு தினங்களில் 200 முறைக்கும் மேல் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அலாஸ்கா மாகாணத்துக்குட்பட்ட அங்கோரேஜ் நகருக்கு வடகிழக்கே 10 மைல்களுக்கு அப்பால் மையம் கொண்டு நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு நகரம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. சாலைகளும், கட்டடங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இருப்பினும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை.

இந்த நிலையில், கடந்த இருதினங்களில் அலாஸ்கா மாகாணத்தின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கத்துக்கு பிந்தைய நிலஅதிர்வு 230 முறைக்கும் மேல் உணரப்பட்டுள்ளது. இருப்பினும் இவை பெரும்பாலும் ரிக்டர் அளவில் 4 முதல் 5 புள்ளிகளுக்கு இடையே பதிவாகியுள்ளதால், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close