அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சாத ஈரான்!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 01:12 pm
iran-will-continue-to-develop-test-missiles-despite-us-opposition

தற்காப்பு காரணங்களுக்காக தங்களின் அணு-ஆயுத சோதனைகள் தொடரும் எனவும், இதற்கு எந்த நாட்டின் அனுமதியும் தேவையில்லை என்றும் ஈரான் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

'அணு ஆயுதங்களை தாங்கி, கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணை சோதனையில் ஈரான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறும் வகையிலான இந்த நடவடிக்கையை ஈரான் உடனே கைவிட வேண்டும்' என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் மைக் பாம்பியோ அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்காப்பு காரணங்களுக்காகவும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்துடனும்தான் ஏவுகணை சோதனைகளை ஈரான் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பிற நாடுகளை அச்சுறுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை. மேலும், இதற்காக எந்த நாட்டின் அனுமதியையும் பெற வேண்டிய அவசியம் இல்லை. எங்களது இந்த சோதனைகள் தொடரும்.

ஈரானின் ஏவுகணை சோதனைகளுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதை அமெரிக்கா கவனத்தில் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close