இந்த பார்டரைத் தாண்டி நானும் வர மாட்டேன், நீயும் வரக்கூடாது...!

  பாரதி பித்தன்   | Last Modified : 04 Dec, 2018 02:39 am

trade-war-between-us-china

அமெரிக்கா, சீனா இடையே நடைபெறும் வர்த்தக போர் ஒரு வழியாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு வின்னர் திரைப்பட ஸ்டைலில் அர்ஜென்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா அதிபர் ஷி ஜின்பிங்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை தான் காரணம்.

மோடிக்கு முந்தைய இந்தியா அல்லது வளரும் நாடுகளில் இது போன்ற வர்த்தக போர் ஏற்பட்டு இருந்தால் இந்த நேரம் அந்த நாடு சோமாலியாவைப் போல மாறிவிட்டு இருக்கும். ஆனால் வர்த்தகப் போரை தற்காலிக முடிவுக்கு கொண்டு வந்ததற்கு காரணம் இரு நாடுகளுக்குமே அடிவிழுந்தது தான் காரணம்.

வர்த்தக உலகில் எதைப்பாற்றியும் கவலைப்படாமல் தன் நாட்டின் வர்த்தகத்தை பற்றி மட்டுமே கவலைப்படுவதில் சீனா முதன்மையானது. இதனால் அது காப்புரிமை உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை.  அதனால் தான் சீனா உலக நாடுகளின் தயாரிப்புகளை எவ்வித அனுமதியும் பெறாமல் தானே உற்பத்தி செய்கிறது. இது பல நாடுகளுக்கும் கேடு விளைவித்தாலும், அமெரிக்காவிற்கு பலத்த சேதாரத்தை ஏற்படுத்தி உள்ளது. இயல்பிலேயே வர்த்தகரான அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாக்க அலுமினியம், உருக்கு இறக்குமதிக்கு 10 மற்றும் 25 சதவீதம் வரி விதித்தார்.  இது இருநாடுகள் இடையே வர்த்தகப் போர் தொடங்க காரணமாக இருந்தது. பின்னர் அவர் 1300 பொருட்களுக்கு 25 சதவீதம் சுங்க வரி விதித்தார்.

இது போன்ற வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தால் தான் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உச்சத்தில் இருந்த செயற்கை வைரம் உற்பத்தி தொழில் இருக்கா என்று கேட்கும் நிலையில் உள்ளது. பட்டாசு உற்பத்தியும் கூட தடுமாறுகிறது. பலவிதமான இந்திய பொருட்கள் விலையை விட சீனாவில் இருந்து இறக்குமதி செய்யட்ட பொருட்கள் விலை மிகவும் குறைவாக இருந்தால் படிப்படியாக அந்த தொழில்கள் ஏறக்கட்டப்படுகிறது.

இதற்கு போட்டியாக சீனா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 128 பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தது.

இதன் காரணமாக இந்தியா போன்ற நாடுகளுக்கு புதிதாக சந்தைகள் கிடைத்தாலும், அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு பாதிப்பு முற்றிலும் போகவில்லை.

அமெரிக்கா, சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதை விட 370 பில்லியன் டாலர் அதிகமாக இறக்குமதி செய்கிறது. இந்த சமன்பாட்டை சீர் செய்யவே வரி விதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறுகிறார்.

சீனா விதித்த வரியால் பாதிக்கப்பட்டது இல்லியனாய், இண்டியானா, கான்சஸ், மின்னசோட்டா, வாஷிங்டன் போன்ற அமெரிக்க மாநிலங்களில் வசிக்கும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உற்பத்தி செய்த சோயாபின், ஆப்பிள்,. செர்ரி போன்ற பழங்கள், உலர் பருப்புவகைகள், ஜூஸ் வகைகள் தேங்கின. இவை அனைத்தும் அழுகும் பொருட்கள் என்பதால் பலத்த அடி விழுந்தது.

இவற்றை ஈடுகட்ட இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்தாலும் அது புண்ணுக்கு புனுகு போடும்  நிலையாகத்தான் இருக்குமே தவிர்த்து காயத்தை முழுமையாக குணப்படுத்தாது. இந்த நடவடிக்கை சீனாவின் அன்னிய செலாவணி கையிறுப்பு ரூ. 195 லட்சம் கோடியில் கனிசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

அதே நேரத்தில் சீனாவின் பொருட்களை அமெரிக்காவும் அதே விலையில் உற்பத்தி செய்வது சிரமம். இதற்காக அமெரிக்கா சீனாவில் தொழில் தொடங்காவி்ட்டாலும் தொழில்நுட்பங்களை விற்பனை அல்லது தானமாக சீனாவிற்கு தர வேண்டிய கட்டாயம் உள்ளது. இநத இரு நாடுகளின் சண்டை அவற்றை மட்டும் பாதிக்காமல் இந்தியா போன்ற நாடுகளையும் பாதித்துள்ளது. ஆனால் தாக்கத்தின் அளவு குறைவு.

இப்படி தற்போது நடைபெற்று வரும் வரத்தகப் போர் இரு நாடுகளுக்கும் உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய் என்று இருநாடுகளையும் பாதித்தது.

இந்நிலையில் தான் அந்த நாடுகள் உதார்விடும் ரவுடியை போல இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வர்தகப் போரை  தற்காலிக முடிவுக்கு கொண்டு வந்துள்ளன. அர்ஜென்டீனா தலைவர் பியூனஸ் அயர்ஸில் ஜி 20 நாடுகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் மாட்ட மேச்ச மாதிரியும் ஆச்சு, அண்ணணுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு கதையாக அமெரிக்க, சீன அதிபர்கள் சந்தித்து பேசி கூடுதல் வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்தனர்.

இது குறித்து அமெரிக்க  மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் மீது தற்போது விதிக்கப்படும் 10 சதவீத கூடுதுல் இறக்குமதி வரியை ஜனவரி 1ம் தேதி முதல் 25 சதவீதமாக உயர்த்தப் போவதாக அதிபர் டிரம்ப் ஏற்கனவே அறிவி்த்தார். அந்த முடிவு தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 90 நாட்களுக்கு தற்போதைய நிலையே தொடரும். இதற்காக சீனா வேளாண்மை, தொழிற்துறை மற்றும் எரிசக்திப் பொருட்களை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனால் தான் ஒவ்வொரு நாடும் முழுமையாக வலிமை பெற்றால் தான் மற்ற நாடுகள் நட்பாக இருக்கும். வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்று சும்மாவா சொன்னார்கள்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.