மலாலாவுக்கு ஹார்வேர்டு பல்கலைக்கழக விருது!

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 06:02 pm

malala-honoured-by-harvard-university

பெண்  குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைகளுக்காக உலக அளவில் பங்காற்றி வரும், பாகிஸ்தானைச் சேர்ந்த 21 வயதான பெண் மலாலாவுக்கு, அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகம் விருது வழங்கி கெளரவித்துள்ளது.

குழந்தைகளின் உரிமைகளுக்காக, சர்வதேச அளவில் உரக்க குரல் கொடுத்ததை பாராட்டி, 2014-இல் மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. மிக இளைய வயதில் நோபல் பரிசை பெற்றவரான இவர், 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இலவச மற்றும் தரமான கல்வி வழங்கப்படுவதுடன், அவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

அவரது இந்த முயற்சியை பாராட்டி, இந்த ஆண்டுக்கான கெளிஸ்ட்மேன் விருதை மலாலாவுக்கு வழங்கி, ஹார்வேர்டு பல்கலைக்கழகம் கௌரவித்துள்ளது. இந்த விருதுடன் 125,000 அமெரிக்க டாலர்கள் (ரூ.88 லட்சம்) பரிசாக வழங்கப்படுகிறது.

தற்போது பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும்  மலாலா, 2012 -இல் பாகிஸ்தானில் பள்ளிச் சென்று வீடு திரும்பியபோது, தாலிபான்களால் தலையில் சுடப்பட்டு உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close