இந்திய பூர்வீக பெண் மீது வெறுப்புணர்வு தாக்குதல்; அமெரிக்கருக்கு 15 ஆண்டுகள் சிறை

  Newstm Desk   | Last Modified : 15 Dec, 2018 08:47 pm
american-man-who-was-assaulted-indian-origin-woman-sent-to-14-years-jail

இந்திய பூர்விகம் கொண்ட பெண் மீது கடந்த மாதம் வெறுப்புணர்வு தாக்குதல் நடத்திய அமெரிக்கருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில், கடந்த மாத இறுதியில் இந்திய பூர்வீகம் கொண்ட பெண் ஒருவர் தனது தோழியுடன் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். சமூகவலைதளங்களில் புகைப்படத்தை பதிவேற்றுவதற்காக தன்னுடைய தோழியை முத்தமிட்டபடி அவர் படம் பிடித்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு அமெரிக்கர், இதை பார்த்து அந்த பெண்ணை மோசமாக திட்டியுள்ளார். அந்த பெண்ணிடம் உங்கள் ஓரினச்சேர்க்கை செயல்களை என் முன்னால் செய்தீர்கள் என்றால் அவ்வளவு தான்" என அந்த நபர் திட்டிக் கொண்டே அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

பயந்து சென்ற அந்த பெண்ணின் பின்னால் அவர் தாக்க, அந்த பெண் கீழே விழுந்து அவரது முதுகுத் தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவருக்கு முதுகுத் தண்டில் முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் தொடர்ந்து அந்த நபர் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றார். இந்த சம்பவத்தை சிலர் விடியோவாக படம் பிடிக்க, அதை வைத்து போலீசார் குற்றவாளியை தேடி கண்டுபிடித்தனர். அவர் 54 வயதான அல்லாஷஹீத் அல்லா என்ற அமெரிக்கர் என தெரிய வந்தது. அவருக்கு எதிராக வெறுப்புணர்வு குற்றச்சாட்டுகளும் பெண்ணை தாக்கிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. இதில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நியூ யார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close