சிலி அருகே கடுமையான நிலநடுக்கம்: ரிக்டர் அளில் 6.2ஆக பதிவு !

  Newstm Desk   | Last Modified : 19 Dec, 2018 04:23 pm
earthquake-in-chile

சிலி அருகேயுள்ள ஈஸ்டர் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.

பசுபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ளது ஈஸ்டர் தீவு. சிலி நட்டின் ஆளுமைக்குட்பட்ட இத்தீவில் கடந்த 2017-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஏறத்தாழ 7,000 மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ளூர் நேரப்படி இன்று காலை சுமார் 7.07 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. 6.2 ரிக்டர் அளவாக பதிவான நிலநடுக்கத்தால் ஈஸ்டர் தீவில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் கடும் பீதியடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலாமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close