பசிபிக் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 04:49 pm
powerful-earth-quake-in-pacific-island

பசிபிக் தீவில் உள்ள டாங்கோ பகுதியில் திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 
 
ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக  நிலநடுக்கம் பதிவானதாக ‌அமரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் டாங்கோ தீவு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close