அமெரிக்கா: தெலங்கானவை சேர்ந்த 3 சகோதர சகோதர்கள் தீ விபத்தில் பலி!

  Newstm Desk   | Last Modified : 26 Dec, 2018 06:31 pm
3-telangana-siblings-dead-in-us-house-fire

தெலங்கானாவை சேர்ந்த சகோதர சகோதரிகள் 3 பேர், அமெரிக்காவின் டென்னஸ்சி மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் மிஸிஸிப்பி நகரில் பிரெஞ்ச் கேம்ப் என்ற கிறிஸ்தவ மத பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. அங்கு, தெலங்கானாவை சேர்ந்த நாயக் என்ற கிறிஸ்தவ போதகர், தனது மகன் மற்றும் மகள்களை படிக்க அனுப்பி வைத்தார். 17 வயதான ஆரோன் நாயக், 15 வயதான ஜாய் நாயக், 14 வயதான ஷாரோன் நாயக் ஆகிய மூவரும், விடுமுறையில், டென்னஸ்சி மாகாணத்தின் மெம்பிஸ் நகருக்கு அருகே உள்ள கோர்டியட்ஸ் குடும்பத்தின் வீட்டில் தங்கியிருந்தனர். 

இந்நிலையில், நேற்று, கோர்டியட்ஸ் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், நாயக் சகோதர சகோதரிகள் மூவரும் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கோர்டியட்ஸ் குடும்பத்த தலைவி கரி கோர்டியட்ஸும் இதில் பலியானார். அவரது கணவர் டேனியல் கோர்டியட்ஸ் மற்றும், அவர்களது மகன் கோல் கோர்டியட்ஸ், உயிர் தப்பினர். டேனியலுக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டது. அவரும் அவரது மகனும் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தீக்கான காரணம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close