அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் பயணம்

  ஸ்ரீதர்   | Last Modified : 27 Dec, 2018 01:21 pm
american-president-trumph-visits-iraq

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முன்னறிவிப்பின்றி ஈராக்கிற்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், திடீர் பயணமாக ஈராக் சென்றுள்ளார். அதிபராக பதவியேற்ற பின்பு டிரம்ப், ஈராக் செல்வது இதுதான் முதல் முறையாகும்.  

அமெரிக்க மற்றும் ஈராக் கூட்டுப்படைகள் செயல்பட்டு பிரத்யேக விமானதளத்தில் அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்க ராணுவ தலைவர்கள் மற்றும் வீரர்களை சந்தித்து அவர்களுடன் ட்ரம்ப் கலந்துரையாடினார்.
 
வீரர்களின் சிறப்பான பணிகளை பாராட்டியதுடன், அவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை டிரம்ப் தெரிவித்தார். அத்துடன் வீரர்களுடன் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தார். 

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக முடிவு எடுத்த பின்னர் ஈராக்கிற்கு, அதிபர் டொனால்டு டிரம்ப் திடீர் பயணம் மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் சிரியா தொடர்பாக அவர் அதிரடியாக அறிவிப்புகள் வெளியிட்டதுபோல், ஈராக் குறித்தும் அவர் புதிதாக ஏதாவது அறிவிப்பார் என்று  எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close