இரட்டை கோபுரம் நிறுவிய நாள்: தெரியாத சேதிகள் சில!

  Padmapriya   | Last Modified : 04 Apr, 2018 10:05 am

அமெரிக்காவின் முக்கிய வர்த்தக நகரமான நியூயார்க்கின் மான்ஹாட்டனில், 1973-ல் இதே தேதியில் இரட்டை கோபுரம் என்று சொல்லக்கூடிய உலக வர்த்தக மையம் திறந்துவைக்கப்பட்டது. ஆனால், இதன் காலம், 2001-லேயே எதிர்பாராத விதமாக முடிவுக்கு வந்தது.

செப்டம்பர் 11, 2001 அன்று விமானங்களை பயன்படுத்தி இந்தக் கட்டிடம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது. அல்-கைதா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது மோதி வெடிக்கச் செய்தனர். இதில், பயணிகள் உட்பட 2,750 பேர் உயிரிழந்தனர். மேலும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மற்றொரு விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினர். மொத்தமாக இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மொத்தமாக 2,996 பேர் உயிரிழந்தனர்.

1975-ல் எடுக்கப்பட்ட படம்.

அப்போது சூளுரைத்தது போல அமெரிக்கா, உலக வர்த்தக மையத்தையும் மீண்டும் அதே கம்பீரத்துடன் எழுந்து நிற்க செய்தது. அல்-கைதாவை இல்லாமல் செய்தது. புதிய உலக வர்த்தக மையத்தின் வளாகம் நவம்பர் 3, 2014 அன்று மறுபடியும் திறக்கப்பட்டது.

தாக்குதலுக்கு பின். அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ், சம்பவ இடத்தைப் பார்த்து... நரகத்துக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டதாக கூறினார்.

மினொரு யாமாசாகி என்ற கட்டிடக் கலை வல்லுநரால், உலக வர்த்தக மையம் முதன்முதலாக வடிவமைக்கப்பட்டது. 16 ஏக்கர் பரப்பளவில், 1,776 அடி உயரத்தில் 104 மேற்தளங்களும் (+5 கீழ் தளங்கள்) கொண்டதாக இருந்தது. நியூயார்க் மற்றும் நியூஜெர்சி துறைமுக ஆணையத்தின் கீழ் கவனிப்பு மற்றும் பராமரிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. 43,600 ஜன்னல்கள் கொண்டது இந்த மாபெரும் கட்டிடம். 1973-ல் இதன் கட்டமானத்துக்கு ஆன செலவு $400 மில்லியன். இன்றைய மதிப்பில் இது $2.3 பில்லியன் என்றும், 10,000 பணியாட்கள் சேர்ந்து இந்தக் கட்டிடத்தைக் கட்டினர். அதில் 60 பேர் கட்டுமானப் பணியின்போது இறந்தனர். தினம் தினம் 87 டன் உணவுப் பொருட்கள் இங்கு இருப்பவர்களுக்காக தயாரானது. 17 குழந்தைகள் இதன் வளாகத்திலேயே பிறந்தனராம். அதன் தரைதளத்தில் $100 மில்லியன் மதிப்பிலான 3800 தங்கக் கட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

தாக்குதல் ஒன்றும் புதிதல்ல! 1993-லேயே இதன் ஒரு கோபுரத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 1500 பவுண்ட் எடையுள்ள வெடிப்பொருட்கள் தாக்கியதில், 100 அடி ஆழம் அளவிலான பாதிப்பு ஏற்பட்டது. கீழ் தளத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 6 பேர் பலியாகினர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தப்பட்டதன் மூலம் கட்டிடத்துக்கு $1,00,000 மதிப்பிலான வேலைப்பாடுகள் இழப்பாகின.

சாகசங்கள்! கயிறு மேல் நடப்பதில் தேர்ச்சி பெற்ற பிரான்ஸைச் சேர்ந்த பிலிப் பெடிட் என்றவர் இரட்டை கோபுரங்களின் இடையே கம்பியை கட்டி, அதன் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திக்கு நடந்தார். இது 1974-ல் நடந்த சம்பவம் 12 மலையேற்ற வீரர்கள், கட்டட உயரத்தை அளந்தனர். பல பாராசூட் சாகங்களும் நடந்துள்ளன. 3 பேர் அதிலிருந்து தற்கொலையும் செய்து கொண்டனர்.

.*.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close