அமெரிக்காவில் கடும் பனிப்புயல்- 800 விமானங்கள் ரத்து

  ஸ்ரீதர்   | Last Modified : 28 Dec, 2018 04:39 pm
800-flights-cancelled-due-snow-storm-in-america

அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அங்கு தற்போது குளிர்காலம் என்பதால் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. 

இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மத்திய அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்புயல் வீசியது. இதன் காரணமாக 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மத்திய மற்றும் மேற்கு சமவெளிப் பகுதிகளில் மழை, பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசியது. இதனால் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சில சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இன்றும் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. 

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான பயணிகள் வெளியூர் செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர். பனிப்புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close