மோடியின் முயற்சியை கிண்டலடித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!...

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 11:57 am
us-president-trump-criticise-pm-narendra-modi

ஆப்கானிஸ்தான் நாட்டில் நூலகம் ஒன்றை நடத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிதியுதவி செய்து வருவதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிண்டலடித்துள்ளார். அந்த நூலகத்தால் எந்தப் பயனும் இல்லை என்று கூறியுள்ளார் அவர்.

வெளிநாடுகளின் நலனுக்கு அமெரிக்கா சார்பில் அதிகம் செலவிடுவதில்லை என்று டிரம்ப் எடுத்த முடிவு தொடர்பாக அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆஃப்கானிஸ்தானில் நூலகம் ஒன்றை கட்டிக் கொடுத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி என்னிடம் சொல்லுவார். அதனால், என்ன பயன் என்று உங்களுக்கு தெரியுமா? ஒரு ஐந்து மணி நேரம் நாம் அங்கு செலவிடலாம். அதன் பிறகு நூலகத்துக்கு நன்றி சொல்லி கிளம்பி விடலாம். ஆஃப்கானிஸ்தானில் அந்த நூலகத்தை யார் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை’’ என்றார்.

முன்னதாக, ஆஃப்கானிஸ்தானில் இருந்து 7,000 அமெரிக்க வீரர்களை திரும்பப் பெறுவதாக டிரம்ப் அரசு கடந்த மாதம் அறிவித்தது. ஆனால், அமெரிக்க படைகளை திரும்பப் பெற்றால் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை பாதிக்கப்படும் என்று ஆஃப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், பாதுகாப்பு உதவிகளை கோருவது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆஃப்கானிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close