மோடியை கிண்டலடித்த டிரம்ப்பிற்கு இந்தியா பதிலடி!

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 04:23 pm
india-responds-after-trump-s-library-in-afghanistan-dig-at-pm-modi

ஆப்கானிஸ்தானில் நூலகம் கட்ட பிரதமர் மோடி உதவியதால் என்ன பயன்? என அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டலடித்ததற்கு, 'ஆப்கானிஸ்தான் அரசுடன் கலந்தாலோசித்த பிறகே, அவர்களின் தேவையை அறிந்து இந்தியா உதவி வருகிறது' என இந்திய தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியா பல்வேறு வகையில் உதவி வருகிறது. இந்த நிலையில் அங்கு நூலகம் கட்டிக்கொடுக்க பிரதமர் மோடி தொடர்ந்து உதவி வருகிறார். இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "ஆப்கானிஸ்தானில் நூலகம் கட்டுவதனால் இந்தியவிற்கு என்ன பயன்? அந்த நூலகத்தை யார் உபயோகிக்கிறார்கள்?" என கிண்டலுடன் கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்நிலையில் இதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதில், "இந்தியா அண்டை நாடுகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவி வருகிறது.  போரினால்  பாதிக்கப்பட்ட ஒரு நாட்டிற்கு உதவி செய்வது என்பது சற்று கடினமான விஷயம் தான். ஆப்கானிஸ்தான் நாட்டு அரசுடன் கலந்தாலோசித்த பிறகே, அந்நாட்டு மக்களின் தேவையை அறிந்து இந்தியா அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. ஆப்கானிஸ்தான் வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு திட்டங்களில் முக்கிய பங்காற்றும் இந்தியா, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் அக்கறை கொண்டுள்ளது" என பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close