அமெரிக்க நாடாளுமன்றம்: நிதி மசோதா நிறைவேற்றம்!

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 09:35 am
finance-bill-passes-in-american-lower-house

அமெரிக்க அரசுத் துறைகளின் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், அவற்றுக்கு நிதி ஒதுக்க வகைச் செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்ற கீழவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மசோதாவுக்கு மேலவையான செனட் இன்னும் ஒப்புதல் தரவில்லை.

சட்ட விரோத குடியேற்றங்களை தடுக்கும் வகையில் மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்ப 5 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும் என அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். 

இதுதொடர்பாக, ஆளும் குடியரசுக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால், அரசுத் துறைகளின் செலவுக்கு நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேறாமல் உள்ளது. இதனால், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலான பல்வேறு அரசுத் துறைகள் அங்கு முடங்கியுள்ளன.

அரசு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தேக்க நிலையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், நிதி மசோதா தற்போது கீழவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

newstm.in


 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close