அமெரிக்கா: மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு; 3 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 05:17 pm

3-dead-in-california-shooting

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் டோரன்ஸ் பகுதியில், நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டோரன்ஸ் பகுதியில், பவுலிங் க்ளப் ஒன்று உள்ளது. நேற்று நள்ளிரவில், அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில், 3 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், அந்த பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், கலிபோர்னியா காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.