அமெரிக்காவில் அதிபர் ட்ரம்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Jan, 2019 06:55 pm

protest-against-president-trumph


அமெரிக்காவில் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புக்கு வழிவகை செய்யும் வகையிலும் எல்லை சுவர் எழுப்ப அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். 

இதற்காக நிதி ஒதுக்கக் கோரினார். ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் செவி சாய்க்கவில்லை. 

இதனையடுத்து அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தொடங்கிய Shutdown கடந்த 3 வாரமாக தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியமின்றிப் பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் மெக்சிகோ எல்லை சுவர் எழுப்புவதற்கு தேவையான நிதியைப்பெற ஒரே வழி அவசர நிலையை பிரகடனப்படுத்துவது தான் என அதிரபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தற்போது அமெரிக்காவலில் நடைமுறையில் உள்ள Shutdown-னை உடனடியாக பின்வாங்க வேண்டும் என மக்கள் அமெரிக்கா வெள்ளை மாளிகை முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.