நாடாளுமன்றத்தில் ஆஜராகிறார் ட்ரம்ப்பின் வழக்கறிஞர்!

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 07:14 pm
convicted-trump-s-personal-lawyer-to-appear-before-parliament-committee

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட விவகாரங்களுக்கான வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற கமிட்டியின் முன் விசாரணைக்கு ஆஜராகிறார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், தேர்தலுக்கு முன், ட்ரம்ப் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறிய இரு பெண்களுக்கு சட்டவிரோதமாக பணம் கொடுத்து அவர்கள் வாயை அடைக்க முயற்சித்தார். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கமிட்டி நடத்திய விசாரணையில், அவர் எம்.பி.க்களிடம் பொய் சொன்னதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்நிலையில், சிறப்பு கமிட்டி நடத்திய விசாரணையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தான் மீறியதாகவும், ட்ரம்ப்புக்கு உதவுமாறு, சட்டவிரோதமாக பெண்களுக்கு பணம் கொடுத்ததாகவும் வழக்கறிஞர் கோஹன் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளன. நாடாளுமன்றத்தின் முக்கிய கமிட்டி, தற்போது கோஹனை நேரில் ஆஜராகி தங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அழைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் ஆஜராக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விசாரணை, தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இதில், ட்ரம்ப்பின் கள்ளத்தொடர்பு விவகாரங்கள்  மட்டுமல்லாமல், தேர்தலில் வெல்ல ரஷ்யாவுடன் கூட்டுசதி செய்தது தொடர்பாகவும் பல கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால், தொலைக்காட்சி நேரலையில் கோடிக்கணக்கானோர் இந்த விசாரணையை காண வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிப்ரவரி 7ம் தேதி இந்த விசாரணை நடைபெறும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close