ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் முறையாக, அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்த, ஹவாய் நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் துளசி கேபர்டு. தற்போது அமெரிக்க எம்.பி.யாக உள்ள 37 வயதான இந்தப் பெண், அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2011 -இல், அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.யாக இவர் பதவியேற்று கொண்டபோது, ஹிந்துக்களின் புனித நூலான "பகவத் கீதை"யின் மீது சத்தியம் செய்த பின்தான் தமது பதவியை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மற்றொரு இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரீஸும், அதிபர் வேட்பாளர் போட்டியில் உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.
newstm.in