உலகின் நம்பர் 1 கோடீஸ்வரருக்கு விவாகரத்து; மனைவியிடம் பாதி சொத்தை இழக்கிறார்!

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 05:37 pm

amazon-chief-jeff-bezos-divorce-could-lose-half-of-his-assets-in-settlements

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரரான அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பெஸோஸ், தனது மனைவியை விவாகரத்து செய்வதாக தெரிவித்துள்ள நிலையில், அவரின் பாதி சொத்துக்களை விவாகரத்தில் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

உலகிலேயே மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அமேசானின் தலைவர் ஜெப் பெஸோஸ், 136 பில்லியன் சொத்துக்களுடன், உலகின் மிகப்பெரிய பணக்காரராக திகழ்ந்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இருவருக்கும் நான்கு குழந்தைகள் உண்டு. இந்த விவாகரத்துக்கு, பெஸோஸ் தனது நண்பரின் மனைவியுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பு தான் காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விவாகரத்தில் பெஸோஸின் சொத்துக்கள் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக அமேசான் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள வாஷிங்டன் மாகாணத்தின் சட்டப்படி, திருமணத்தின்போது சேர்க்கப்பட்ட சொத்துக்கள் அனைத்திலும், கணவனுக்கும் மனைவிக்கும் சம பங்கு உண்டு என்ற விதி உள்ளதால், அமேசானின் பங்குகளில் பாதியும், பெஸோஸின் சொத்துக்களில் பாதியும், அவரது மனைவிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமேசான் நிறுவனத்தை பெஸோஸ் துவக்கும் முன்னரே, இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதால், நிறுவனத்தின் வளர்ச்சியில் அவரது மனைவிக்கு பெரும் பங்கு உண்டு, என நீதிமன்றம் கருதுவதற்கு வாய்ப்புள்ளது.

மேலும் எழுத்தாளரான மெக்கென்சி, கணவனுக்காக தனது கனவை தியாகம் செய்து, வீட்டு மனைவியாக இருந்து குடும்பத்தை கவனித்துக் கொண்டார் என்று மெக்கன்சிக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். 

எது எப்படியோ அடுத்து வரும் மாதங்களில் உலகிலேயே அதிகம் கவனிக்கப்படும் ஒரு வழக்காக இந்த விவாகரத்து வழக்கு மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...

பெஸோஸின் சொத்தில் பாதியை அவரது மனைவி பெறுவது நியாயம் தானா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...கமென்டில் பதிவு செய்யுங்கள்...

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.