அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு- 3 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Jan, 2019 04:38 pm
america-3-dead-due-to-heavy-snow-fall

அமெரிக்காவில் பெய்துவரும் கடும் பனிப்பொழிவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் வாஷிங்டனில் வழக்கத்தை விட 2 முதல் 4 அங்குல அளவுக்கு அதிகமாக பனி கொட்டியுள்ளது. 

சாலைகளில் பனி படர்ந்துள்ளதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பனியால் போர்த்தப்பட்டு காணப்படுகிறது. கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

வாஷிங்டன், மேரிலேண்ட், விர்ஜீனியா, உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் நூற்றுக்கணக்கான விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விமானங்கள் தாமதமாக வருகின்றன. 

அமெரிக்காவில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே அமெரிக்காவின் வட கிழக்கு பகுதியில் தாக்கிய பனி புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close