விண்வெளியில் ஏவுகணை தடுப்பு திட்டம்... டொனால்ட் ட்ரம்ப் சூளுரை

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 09:44 pm
trump-announces-anti-missile-defence-system-in-space

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஏற்கனவே விண்வெளியில் விமானப்படை போன்ற 'விண்வெளிப்படை'யை அமைக்க உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது விண்வெளியில் ஏவுகணை தடுப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசு வரலாறு காணாத முடக்கத்தை சந்தித்து வருகிறது. அமெரிக்க அரசு இயங்குவதற்கான சம்பள பட்ஜெட்டை அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப் தடுத்து வைத்துள்ளார். எல்லையில் தான் சுவர் கட்டுவதற்கு நிதி வழங்க மறுக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக அரசு துறைகளுக்கான சம்பள பட்ஜெட்டை ட்ரம்ப் தடுத்து வைத்துள்ளார். 27 நாட்களாக அந்நாட்டின் அரசு முடங்கி உள்ளது. இதனால் பல்வேறு அரசுத் துறையினர் பணியாளர்கள் சம்பளம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பு செயலகமான பென்டகனுக்கு சென்ற அதிபர் ட்ரம்ப், புதிதாக விண்வெளியில் ஏவுகணை தடுப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். "இது புத்தம் புதிய தொழில்நுட்பம். நமது பாதுகாப்பு மற்றும் தாக்குதலில் இது மிகப்பெரிய பங்கு வகிக்கும். அடுத்த பட்ஜெட்டில் விண்வெளி ஏவுகணை தடுப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும், "விண்வெளிதான் அடுத்து போர் தொடுக்கும் இடமாக இருக்கும். விண்வெளிப்படை மூலம் அமெரிக்கா அதில் முன்னிலை வகிக்கும்" என்றும் தெரிவித்தார்.

ட்ரம்ப்பின் பேச்சில் எந்தவிதமான திட்டங்களைப் பற்றியும் குறிப்பாக தெரிவிக்கவில்லை. எப்படி செயல்படுத்தப்படப்போகிறது, இதற்கான நிதி எப்போது ஒதுக்கப்படும், உட்பட எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே, நிதி இல்லாமல் அரசு முடங்கியுள்ள நிலையில் ட்ரம்ப் விண்வெளியில் ஏவுகணை தடுப்பு திட்டம் செயல்படுத்துவதாக, கூறுவது வேடிக்கையாக உள்ளதாக எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close