கொலம்பியா கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.நா கடும் கண்டனம்!

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 11:49 am
unsc-condemns-car-bombing-in-colombian-capital

கொலம்பியாவில் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

கொலம்பியாவின் தலைநகரான போகோடாவில் சோதனைச்சாவடி அருகே உள்ள ஒரு போலீஸ் பயிற்சி மையத்தின் அருகே நேற்று பலத்த சத்தத்துடன் வெடிகுண்டுகள் நிரப்பிய கார் வெடித்தது. இதனால் அந்த பகுதியே ஆட்டம் கண்டது. வெடிகுண்டு வெடித்ததில் அங்கு இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறினர். பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

தற்போது பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 68 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர், அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கொலம்பியா கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ஐ.நா பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த தாக்குதலில் இருந்து கொலம்பியா அரசும், அந்நாட்டு மக்களும் விரைவில் மீண்டு வர வேண்டும். மேலும், ஐ.நாவுடன் இதர நாடுகளும் கொலம்பியாவிற்கு உதவ வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது. 

முன்னதாக ஐ.நா பொதுச் செயலர் ஆண்டனி கிட்டரஸ் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close